‘கேபிஒய்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ராமர், தனது இயல்பான நகைச்சுவை டைமிங், யதார்த்தமான நடிப்பு மற்றும் எளிமையான தோற்றத்தின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல், ‘கோமாளி’, ‘சிக்ஸர்’, ‘அப்பன் சுப்பன்’ போன்ற திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ‘சற்று நேரத்தில் தீர்ப்பு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
டிபிகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வேலன் எழுதி இயக்கியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
