‘பங்கி’ என்ற புதிய நகைச்சுவை திரைப்படத்தில் நடிகர் விஸ்வக்சென்னுடன் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல கவனத்தை பெற்றது.
இந்த திரைப்படத்தில், விஸ்வக்சென் ஒரு திரைப்பட இயக்குனர் கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், கயாடு லோஹர் நடிகையாக நடிக்கிறார். பீம்ஸ் செசிரோலியோ இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கத்தில் உருவாகும் ‘பங்கி’ திரைப்படம் முதலில் ஏப்ரல் 3-ம் தேதி கோடை வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, படம் பிப்ரவரி 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘தீரே தீரே’ தற்போது வெளியாகியுள்ளது.
