மோகன்லால் மற்றும் சிரஞ்ஜீவி நடிப்பில் உருவாகிறதா புதிய திரைப்படம்?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் தனது 158வது படத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி, தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகும் இந்தப் படத்தில், வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் சிரஞ்சீவியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த மோகன்லால், தற்போது முதல் முறையாக சிரஞ்சீவியுடன் இணைவதால், இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading