காதல் – நகைச்சுவை திரைப்படமாக உருவான ‘பீல் மை லவ்’!

முன்னணி திரைப்பட விநியோகஸ்தரான ஏ.என். பாலாஜி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பீல் மை லவ்’. இந்தப் படத்தை இயக்குநர் ஹரி பிரகாஷ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், ராஜ ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் ஹரி பிரகாஷ் கூறுகையில், “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்ற மனதை வருடும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான மனித உறவுகள், ஆழமான உணர்வுகள் மற்றும் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வித்தியாசமான காதல் – நகைச்சுவை திரைப்படமாக இது ரசிகர்களை கவரும்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading