Sunday, April 28, 2024

15 நிமிஷம் நடிக்க இவ்வளவு கோடியா? கஜானாவை நிரப்பும் கமல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விரைவில் வெளியாகவுள்ளது இந்தியன் 2 திரைப்படம்.இதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.இதனிடையில் கல்கி படத்தில் உலகநாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவலை நீங்கள் கேட்டால் எல்லோரும் ஆடிபோவீர்கள்.

நடிகையர் திலகம் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்ட பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார்.அவரின் கதாபாத்திரம் கல்கியாக இருக்குமா என எதிர்பார்ப்பு கிளம்பியது.

இப்படத்தில் கமலின் தோற்றம் நீட்டிக்கப்பட்ட காட்சிகளாக இருக்கும் என சொலாலப்பட்ட நிலையில் ஆனால் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.இந்த 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடியை சம்பளமாக கமல் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தியன் 2 படத்திற்கான சம்பளத்தை பல கோடிகளாக பெற்ற கமல் கல்கி படத்தில் 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடியை பெற்றது பெரிதும் ஆச்சரியத்தையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News