Sunday, April 28, 2024

ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறிவரும் நிலையில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருவது தற்போது வழக்கமாகிவிட்டது.

அதன்படி 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இல்லாமல் ஒரு வாரம் ஹவுஸ் புல்லாகி மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.இதுவரை கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூல் பத்து கோடிக்கும் மேல் தாண்டி போய் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் கமல் படங்களை கையில் எடுத்து ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம்.விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படமும் மற்றும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படமும் ரீ ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம்.

இவற்றுள் குஷி படம் வருகின்ற மே மாதத்தில் 19ஆம் தேதியும், கமல் நடித்த இந்தியன் படத்தை வருகின்ற மே 30ஆம் தேதியும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம்.அதே சமயம் இவற்றுள் இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் இந்தியன் 2 படத்திற்கான மிகப்பெரிய ப்ரோமோஷனாக இருக்கும் லைக்கா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News