Monday, September 23, 2024

மெய்யழகன் படத்தில் சர்தார் 2 டைட்டில் டீஸரா? #MEIYAZHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சர்தார் 2 உருவாகி வருகிறது. இந்தப் படமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் – கார்த்தி கூட்டணியில் உருவாகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, சர்தார் 2 டைட்டில் டீசரை வெளியிட ஸ்பெஷல் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனராம்.

தற்போது, இந்த டீசர், செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் மெய்யழகன் படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News