Tuesday, April 30, 2024

மிஸ் செய்த சூர்யா டேக் ஓவர் செய்த அருண் விஜய்…. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வணங்கான் போஸ்டர் வெளியீடு..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். முதலில் இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவர் பின்னர் படத்திலிருந்து விலகினார். பாலா முன்பு துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீவிரமாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News