சிவகார்த்திகேயனை அடிக்கடி கமல் அமரன் படத்திற்கு அழைக்க முருகதாஸ் செய்வது அறியாது திகைக்கிறார் காரணம் அமரன் படத்தின் கெட்டப் வேறு, தற்போது முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தின் கெட்டப் வேறு இதனால் கதாபாத்திரத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ என ஏ.ஆர்.முருகதாஸ் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளாராம்.

இதற்கிடையில், சல்மான் கான் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட் ஆக்கியுள்ள முருகதாஸிற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.”இன்னும் ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்து வாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவேன், என சல்மான் கான் கூறியிருக்கிறார்.தமிழில் முருகதாஸ் எடுத்த கடைசி படம் தர்பார். இந்த படம் அவருக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் பெரிய பின்னடைவாக அமைந்தது.

ரஜினியின் கேரியரில் மிகவும் ஒரு தோல்விப்படமாக இந்த படமும் அமைந்தது.இப்போது, முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் படத்தை மட்டுமே நம்பி இருக்கிறார் எனவும் மீண்டும் எப்படியாவது கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி உயர முயற்சித்து கொண்டு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
