Monday, April 29, 2024

பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு, அவர் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக, இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்
ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்தப் படத்தில் ஒரு பாடல் படமாக்கம் இன்னும் முடியாமல் இருப்பதால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.இந்தியன் படத்தை போல இந்தியன் 2 படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, படக்குழு சார்பில் தகவல்கள் என்ன என்றால், மே 16ஆம் தேதியன்று, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் தனது படங்களை மட்டுமல்லாமல், இசை வெளியீடுகளையும் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடுவார். அந்த வகையில், இந்த படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News