Thursday, May 9, 2024

நீங்க அத கவனிச்சீங்களா? ட்ரெண்டாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ன் இன்ஸ்டா புகைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் கொண்டு இயக்கினார். ஆனால் இப்படம் கடுமையான விமர்சனங்களையும் தோல்வியையும் சந்தித்தது. இதை தொடர்ந்து எந்த ஹீரோவை கொண்டு அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இப்போதும் இன்ஸ்டாகிராம் இல்லை ஆக்டிவாக உள்ளார் ஜஸ்வர்யா ரஜினிகாந்த். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோக்களையும் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது மகன்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பை முடித்த யாத்ரா அளவுக்கு பெரிய மகன் இருக்கும் சூழலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழவே முடியாது என்கிற முடிவு எடுத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் பிரிய போவதாக முடிவெடுத்துள்ள நிலையில், இரு மகன்களும் யாருடன் இருக்க போகின்றனர் என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் காலில் அணிந்துள்ள காலணியில் A, L மற்றும் Y போன்ற எழுத்துக்கள் உள்ளன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லிங்கா மற்றும் யாத்ராவின் முதல் எழுத்துக்களை குறிக்கும் விதமான டிசைன் கொண்ட செருப்பை காலில் அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

- Advertisement -

Read more

Local News