Friday, May 10, 2024

தில் ராஜூவுடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா! பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு Triple ட்ரீட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது அடுத்த திரைப்பட அப்டேட்டை அறிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, தனது நடிப்பின் மூலமாக, தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

குறிப்பாக, “கீத கோவிந்தம்” மற்றும் “அர்ஜுன் ரெட்டி” போன்ற படங்கள் மூலம் பாராட்டையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். அவரது சமீபத்திய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை எனினும், அவரது நடிப்புக்கும் திறமைக்கும் பஞ்சமில்லை.இந்நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்களை குறித்த அப்டேட்கள் போஸ்டராக வெளியாகியுள்ளது.மற்றொரு படத்தின் படக்குழு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ளது.

கடைசியாக “பேமிலி ஸ்டார்” என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் ஆனால் அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.தற்போது விஜய் தேவரகொண்டாவின் அடுத்தடுத்த திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளயாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

முதலாவதாக ஒரு போஸ்டர் ரத்தக்கறை படிந்த கை வாளை ஏந்தியபடி உள்ள காட்சிகளை கொண்டுள்ளது, இது கிராமப்புற ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது‌.மேலும், இப்படத்தை ரவிகிரண் கோலா இயக்குகிறார் இவர், “ராஜா வாரு ராணி காரு” எனும் வெற்றி படத்தை இயக்கியவர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் 59வது திரைப்பட தயாரிப்பு இதுவாகும்.

அதேபோல் விஜய் தேவரகொண்டாவின் 14வது திரைப்படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது.இப்படத்தை மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் ராகுல் சங்கீர்த்தியான் இயக்கவுள்ளார்.இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.அதேபோல் VD12 படமும் உருவாகியுள்ள நிலையில் படக்குழுவினர் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டு விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை கௌதம் தின்னாரி இயக்குகிறார்.நாக வம்சி தயாரிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News