Wednesday, May 1, 2024

‘சண்டையில் சாவது தான் வீரம்’ மாஸ் டயலாக் உடன் வெளியான அர்ஜுன் தாஸ்-ன் ரசவாதி டிரெய்லர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அர்ஜுன் தாஸ், கைதி படத்தின் மூலம் சிறப்பான வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி, அநீதி படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். தற்போது, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகி உள்ளது.

மே 10ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக சில நாட்களே இருக்கும் நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது பணி டிரெய்லரில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டயலாக்குகள் வித்தியாசமாக அமைந்துள்ளன. எனவே, இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயமின்றி நடிப்பதுதான் வீரம் என்றும், சண்டையில் சாவதுதான் வீரம் என்று சொல்லிக் கொடுத்துள்ளனர் என்று இந்தப் படத்தின் ட்ரெய்லரில் அர்ஜுன் தாஸ் வசனம் பேசுகிறார். ரகுவரன் போன்ற தனித்துவமான குரலும் தோற்றமும் கொண்ட அர்ஜுன் தாஸ், ஏராளமான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. மகாமுனி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக நிலைபெற்றுள்ள சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்கும் ரசவாதி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News