Wednesday, May 1, 2024

திடீரென விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்… ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் உள்ள பிரபலமான கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான விஷ்ணு கமல் தீவிர விஜய் ரசிகர். திடீரென இவர் கோட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயைச் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

GOAT படப்பிடிப்பிற்கு இடையே ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய், விஷ்ணு கமலை வரவேற்று அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி பெற விஷ்ணு கமல் வாழ்த்து தெரிவித்தார்.

‘கில்லி’ திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பியதற்கு விஷ்ணு கமலுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் எடுத்த புகைப்படத்தில் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்த விஜய், அவர் படம் போட்ட டீசர்ட் அணிந்த விஷ்ணு கமல் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News