Monday, May 27, 2024

கைவிடப்பட்டதா சலார் 2? முக்கியமான அப்டேட்-ஐ வெளியிட்ட படக்குழுவினர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2002-ம் ஆண்டு வெளியான “ஈஸ்வர்” படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபாஸ். “ராகவேந்திரா,” “வர்ஷம்,” “சக்கரம்,” “சத்ரபதி,” “யோகி,” “பில்லா,” “டார்லிங்,” “மிஸ்டர் பர்ஃபெக்ட்,” “ரிபெல்,” மற்றும் “ஆக்சன் ஜாக்சன்” போன்ற பல படங்களில் நடித்து, தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய நடிகரானார்.

ஆனால், அவரை உலகளவில் பிரபலமாக்கியது 2015-ல் வெளியான “பாகுபலி” திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2″ படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனையை பதிவு செய்து, பாலிவுட் நடிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.”பாகுபலி 2” படைத்த 1800 கோடி ரூபாய் வசூல் சாதனையை பின்னர் பல படங்களில் நடித்து முறியடிக்க முடியாமல் பிரபாஸ் போராடி வந்தார். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், 2022-ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான “சலார்” திரைப்படம் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

மீண்டும் ராஜமௌலி உடன் இணைந்தால் தான் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.”சலார் 2″ திரைப்படம் நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், “சலார்” படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து “They can’t stop laughing” என்கிற போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கல்கி நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் “கல்கி” திரைப்படம், சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் புரோமோஷன்களில் பிரபாஸ் பிஸியாக உள்ளதால் தற்காலிகமாக “சலார் 2” படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News