நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படம் இந்த வாரம் ஜூன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்திற்காக மும்பையில் மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், கமல் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதற்கடுத்து ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எங்குமே நடைபெறவில்லை.இதனிடையே, பிரபாஸ் ஓய்வெடுப்பதற்காக ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்கள் வரை அங்கேயேதான் தங்கியிருக்கப் போகிறாராம்.

கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்தும் கூட தமிழ் ரசிகர்களிடையே இங்கு சென்னையில் இப்படத்தின் எந்த நிகழ்வும் இல்லாமல் இருப்பதும் மற்றும் பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மும்பையோடு நிறுத்திக் கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மாநிலத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர், நாயகன் எந்த விழாவையும் நடத்தாமல் போனது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.