Saturday, May 25, 2024

மாநாடு படத்தில் எ‌ஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது, இயக்கத்திலிருந்து சிறிது விலகினாலும், மிக பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக, அவரது நடிப்பு “அரக்கன்” என்று புகழ் பெற்றுள்ளது. சமீபத்தில், அவர் நடித்த மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா 2 படங்கள் வெளியானது. தொடர்ந்து, இந்தியன் 2 மற்றும் எல்ஐசி போன்ற படங்களும் வெளியிடப்படவிருக்கின்றன.

தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளை உருவாகுவது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால், தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே, எஸ்.ஜே.சூர்யா “நியூ” என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை இயக்கி வெற்றியடைந்தார். அடுத்ததாக, “அன்பே ஆருயிரே” படத்தை பேரலல் உலகத்தை மையமாக வைத்து இயக்கி தனது திறமையை காட்டினார்.எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பயணத்திற்கு முக்கிய மைல்கல்லானது “மாநாடு” படம்.

வெங்கட் பிரபு இயக்கிய அந்தப் படத்தில், சீனுக்கு சீன் அசால்ட்டாக நடித்திருந்தார் சூர்யா. அதனைப் பார்த்த பிறகு, சூர்யாவின் பன்முக நடிப்பு ஆற்றல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.இதில் ஆச்சரியமானது என்னவென்றால், அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை முன்னதாக பலர் ஏற்கவிருந்தார்கள்.முதலில், பசுபதியிடம் வெங்கட் பிரபு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை. அதேபோல், கிச்சா சுதீப், ரவி தேஜா போன்றவர்களும் இந்த ரோலில் நடிக்க அழைக்கப்பட்டனர். அவற்றிற்கும் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக நடிக்க முடியவில்லை.

. அரவிந்த் சாமியும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்த நிலையில், அவரும் அதே பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. இறுதியில், எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் இணைந்தார் என்று சுரேஷ் காமாட்சி ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News