Sunday, May 26, 2024

இளையராஜாவின் புகாருக்கு பதில் அளித்த மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள கண்மணி அன்போடு பாடலுக்கான உரிமையைப் பெற்ற பிறகே அந்த பாடலை பயன்படுத்தியதாக தயாரிப்பாளர், இசையமைப்பாளர்‌‌ இளையராஜாவின் நோட்டீஸ்க்கு பதிலளித்துள்ளார்கள். இது தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து மிகுந்த வெற்றிபெற்ற திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகில் உள்ள மஞ்சும்மல் எனும் கிராமத்தில் வசிக்கும் 11 நண்பர்கள் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால், அது தோல்வியுற்றதால், திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு சென்று, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள்.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், பாடலை உருவாக்கியவர் என்ற முறையில், பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் தாம் என்பதால், உரிய அனுமதி பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பயன்படுத்தியதற்காக இழப்பீடாக தகுந்த தொகையை வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் நிறுவனங்களிடம் முறையாக அனுமதி பெற்றே அந்த பாடலை பயன்படுத்தியதாகவும், தெலுங்கு மற்றும் பிற மொழி உரிமைகளையும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த புகார் தேவையற்றது என்று இளையராஜாவுக்கு பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News