Saturday, September 14, 2024

பாயும் நெருப்பே… பாதாள நெருப்பே… நெருப்பாய் வெளியான கங்குவா FIRE பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கங்குவா படத்தின் முதல் பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபயர் சாங் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை விவேகா எழுத, விஎம் மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News