மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான படம் டர்போ. மம்முட்டியுடன் ஏற்கனவே போக்கிரி ராஜா மற்றும் மதுர ராஜா படங்களை இயக்கிய புலி முருகன் இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த டர்போ அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருந்தாலும், கமர்ஷியல் வெற்றியை பெற முடியவில்லை. இந்த படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் விஜய் சேதுபதி தனது குரல் மூலம் அவருடைய பங்களிப்பை அளித்துள்ளார்.திரையில் இப்படம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் தருணத்தில், இரண்டாம் பாகம் இருப்பதை குறிப்பிடும்படி பின்னணியில் விஜய் சேதுபதியின் குரலில் வசனங்கள் இடம்பெறும்.
இந்த நிலையில், இப்படத்தில் அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் மம்முட்டி தாங்கள் இருவரும் இணைந்திருப்பது போன்ற ஒரு டர்போ படத்தின் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு இப்படத்தில் பங்களிப்பை அளித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.