2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
அந்த மூன்று கதாநாயகிகளிலிருந்து மடோனா செபாஸ்டியன் தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால், சில ஆண்டுகளாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில், விஜய் நடித்த ‘லியோ’ படத்தில், அவரின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அவர் ரசிகர்களை ஈர்க்க தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது, இளவரசி போன்ற உடைகள் மற்றும் ஆபரணங்களுடன் வெளிவந்துள்ள அவரது போட்டோஷூட் ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தள்ளன.