விஜய் மற்றும் திரிஷா இணைந்து ‘கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ’ உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர். அதன்பின் ‘தி கோட்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாடினார். இந்த நிலையில், நேற்று துபாயில் சைமா விருது விழா நடைபெற்றது. அங்கு திரிஷா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேடையேறிய திரிஷா, தனது ஆரம்ப காலத்திலிருந்து இணைந்து நடித்த அனைத்து ஹீரோக்கள் பற்றியும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த நேரத்தில், விஜய்யின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டு, “இவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு திரிஷா, விஜய்யின் அரசியல் பயணத்தை குறிப்பிட்டு, “அவரது புதிய பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் கொண்டிருக்கும் அனைத்து கனவுகளும் நனவாக வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் அவருக்குண்டு” என்று கூறி வாழ்த்தினார்.