Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

நடனத்தால் திரையை அதிரடி வைக்க காத்திருக்கும் வித்யா பாலன் மற்றும் மாதுரி தீட்சித்… எதிர்பார்ப்பை தூண்டிய #Bhool Bhulaiyaa 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2005ல் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி” தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. 2007ல் இந்தப் படம் ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் “பூல் புலையா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தை ஹிந்தியில் வித்யா பாலன் நடித்தார். படம் வெற்றிபெற்ற பிறகு, 15 ஆண்டுகளின் பின்னர் இதன் இரண்டாம் பாகம் “பூல் புலையா-2” என்ற பெயரில் வெளியானது.

அனீஸ் பஸ்மி இயக்கிய இந்தப் படத்தில் தபு இரட்டை வேடங்களில் நடித்தார், மேலும் கியாரா அத்வானியும் கார்த்திக் ஆர்யனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டாம் பாகமும் வெற்றியடைந்த நிலையில், தற்போது மூன்றாம் பாகமான “பூல் புலையா-3” உருவாகியுள்ளது. இதையும் அனீஸ் பஸ்மி இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த வித்யா பாலன் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். 80, 90களில் பிரபலமான மாதுரி தீட்சித் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கார்த்திக் ஆர்யன் இந்தப் பாகத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டிரைலரில், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தின் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினி நடன போட்டி காட்சியை மாதிரியாக, மாதுரி தீட்சித் மற்றும் வித்யா பாலன் இணைந்து நடனம் ஆடும் காட்சி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இவர்கள் பேய்களின் உருவங்களில் கதாநாயகனை மிரட்டும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. தீபாவளி முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News