நிறங்கள் மூன்று படத்திற்கு பிறகு அதர்வா, தற்போது ‛டிஎன்ஏ, அட்ரஸ், தானா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 25வது படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க, வில்லனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அதர்வாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இது தொடர்பாக அதர்வா கூறுகையில், இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நடித்தபோது இயக்குனர் சுதாவுடன் நான் பரிச்சயமானேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருமுறை ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் கூறியிருந்தார்.
எனவே, இந்த படத்தில் நடிக்க அவர் அழைத்ததும் உடனே சம்மதித்தேன். இந்த படத்தில் எனக்கு முக்கியமான வேடத்தை வழங்கியிருக்கிறார். இது எனக்கு திருப்புமுனையாக இருக்கும்,” என்று கூறினார்.