பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் ஹாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மகேஷ் பாபு – எஸ்.எஸ். ராஜமவுலி கூட்டணியில் உருவாகும் SSMB 29 படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு திரும்பியுள்ளார். மேலும், கிரிஷ் 4 படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிப்புடன் சேர்த்து தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல படங்களையும் தயாரித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், தயாரிப்பாளராக வந்த காரணத்தை அவர் விளக்கினார்.
பாலிவுட்டில் நுழைந்த இரண்டாண்டுகளில், அங்குள்ள சூழ்நிலையை, திரைப்பட பின்னணி இல்லாதவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டதாகக் கூறியுள்ளார். வெளியாட்கள் வெற்றி பெறுவது எளிதல்ல. நான் அதிக உழைப்பின் பிறகே வாய்ப்புகளைப் பெற்றேன். என்னைப் போல புதுமுகங்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன்” என்று தெரிவித்தார்.