Touring Talkies
100% Cinema

Friday, April 25, 2025

Touring Talkies

கவனத்தை ஈர்க்கும் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் பேமிலி ‘ ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு, நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள புதிய படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படத்தை ‘குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் கமலேஷ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஷான் ரோல்டன். சமீபத்தில் வெளியான டீசரில், சசிகுமாரும் சிம்ரனும் இலங்கைத் தமிழர்களாக நடித்திருப்பது, குறிப்பாக சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News