தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியாக உருவாகியிருந்தாலும் தனுஷ் எந்தவிதமான கதையோடு இப்படத்தை இயக்கியுள்ளார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று கோவையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.