மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா படம் விருஷபா. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.வி.எஸ். ஸ்டுடியோவின் அபிஷேக் வியாஸ், ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவீஸின் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸின் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மைசூரில் நடந்த பெரும் படப்பிடிப்பில் 3000க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்றதாக நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்துள்ளார். இவர் தமிழில் லொடுக்கு பாண்டி, ஒரு மெல்லிய கோடு, வன்முறை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
விருஷபா படத்தின் கதை காதலும் பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியும் மோதும் வகையில் அமையவுள்ளது. மேலும், இது ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெய்னர் மட்டுமல்லாது, அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கான டப்பிங் பணிகளை மோகன்லால் முடித்துவிட்டார். சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டரில், விருஷபா படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.