இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கியுள்ளார். இது கார்த்திக் சுப்புராஜின் 10வது படமாக உருவாகிறது.

இதனை, ஆஸ்கர் விருதுபெற்ற எலிபேண்ட் விஸ்பரஸ் (The Elephant Whisperer) ஆவணப்படம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களைத் தயாரித்த பிரபல சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன், தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குழு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

