நடிகர் சசிகுமார் தமிழில் அயோத்தி, கருடன், நந்தன் உள்ளிட்ட அற்புதமான படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்.
இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் சிம்ரன் நடிக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் 1ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடலான ‘ஆச்சாலே’ வெளியாகி வைரலாகி வருகிறது.