2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னதாக சென்னையில் பிரமாண்ட படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது.
படப்பிடிப்பு தொடங்கிய பிறகு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது என்றும் வதந்தி பரவியது. குஷ்புவும் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.