Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கார் ரேஸிங்-ல் அஜித் செய்த விஷயம்… மனமார பாராட்டிய தமிழக துணை முதல்வர் உதயநிதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துபாயில் நடைபெறவிருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் தனது அணியுடன் பங்கேற்கவிருக்கிறார். நேற்று அவர் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் பயன்படுத்திய ஹெல்மெட்டிலும் பந்தயக் காரிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு துணை முதலமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி தனது எக்ஸ் தளத்தில், “உலக அளவில் சிறப்புக்குரிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கும் நடிகர் அஜித்துக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒற்றுமையாக செயல்படுவோம். கார்பந்தயப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க அஜித் சார் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அஜித் தனது உபகரணங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் லோகோவை பயன்படுத்தியதால், விஜய் சமீபத்தில் வெளியிட்ட ‘திராவிட மாடல்’ தொடர்பான கருத்துக்கு அஜித் மறைமுகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News