Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அக்டோபரில் வெளியாகிறது சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் ! #SUMO

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் உருவான “சுமோ” என்ற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு மற்றும் வி.டி.வி. கணேஷ் போன்றவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் வெளியாக இருந்த இந்த திரைப்படம், கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, ‘சுமோ’ திரைப்படம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News