பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின், டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ரவுடி அண்ட் கோ’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். இவர் முன்பு 2023 ஆம் ஆண்டு வெளியான சித்தார்த்-ன் ‘டக்கர்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படத்திற்குப் பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் மீண்டும் இணைகிறார்கள்.
சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான 3BHK திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகும் சித்தார்த்-ன் ‘ரவுடி அண்ட் கோ’ என்ற புதியபடம் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

