பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் இயக்குநராக தனது பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரை ஆர்யன் கான் எழுதி, இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப்தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை ஷாருக்-கவுரி கானின் ‘ரெட் சில்லிஸ்’ நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
இந்த வெப்தொடரின் மூலம் ரெட் சில்லிஸ் நெட்பிளிக்ஸ் உடன் 6-வது முறையாக இணைகிறது. இதற்கு முன்பு, ‘டார்லிங்ஸ்’, ‘பக்சக்’, ‘கிளாஸ் ஆப் 83’, ‘பேட்டல்’, ‘பார்ட் ஆப் பிளட்’ ஆகிய படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.