பாலிவுட் நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த அவர், தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் நடித்த படம் ‘சர்தார்’, அதில் அவர் கார்த்திக்குப் ஜோடியாக நடித்திருந்தார்.
அதே நேரத்தில் பாலிவுட்டில், விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூருடன் இணைந்து ஒரு பார்ஸி வெப் சீரிஸில் நடித்தார். அந்த வெப் சீரிஸின் வெற்றியால், இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளன.