நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவாக்கும் புதிய திரைப்படத்துக்கு ‛ஆபரேஷன் கம்போடியா’ என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியான ‛துடரும்’ திரைப்படத்தை இயக்கியிருந்த தருண் மூர்த்தி, அந்தப் படத்தின் மூலம் பெரும் வெற்றியை பெற்றார். ரூ.200 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தருண் மூர்த்தியின் முதல் படைப்பாக வெளிவந்த ‛ஆபரேஷன் ஜாவா’ திரைப்படத்தின் தொடர்ச்சிப் பகுதியாக ‛ஆபரேஷன் கம்போடியா’ உருவாகிறது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், இர்ஷாத் அலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு வெளியான ‛ஆபரேஷன் ஜாவா’, கேரளாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, இதன் தொடர்ச்சியான ‛ஆபரேஷன் கம்போடியா’வும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.