Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

பிக்பாஸ் கேம் ஷோவில் பங்கேற்றது என் வாழ்க்கையை பாதித்து விட்டது – நடிகை தேஜஸ்வி மடிவாடா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடத்தப்பட்டு, இதுவரை எட்டு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இப்படியான சூழலில், தெலுங்கு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் தனது கேரியர் முடிந்துவிட்டதாக வெளிப்படையாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமல்ல, “சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு” படத்தின் மூலம் பிரபலமான தேஜஸ்வி மடிவாடா. 

இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-இல் பங்கேற்று, தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு அவர் பல படங்களில் பிஸியாக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடந்ததாக இல்லை.தற்போது, தேஜஸ்வி தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், “பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் நம்மை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் நம்மைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதனால் தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நமக்கு வாய்ப்புகளை வழங்கத் தயங்குகிறார்கள். பிக்பாஸ் கேம் ஷோவில் பங்கேற்றது என் வாழ்க்கையை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது” என்று கூறினார். இவரது இந்தக் கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News