சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘குபேரா’. தமிழ், தெலுங்கில் தயாராகி ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.தமிழில் மிகச் சுமாரான வசூலையும், தெலுங்கில் நல்ல வசூலையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. இப்படம் அடுத்த வாரம் ஜூலை 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் இடம் பெற உள்ளது.
