இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணி ரத்னத்தை சந்தித்து அவர் குறித்தான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். தனது பதிவில், “ அமரன் திரைப்படத்தின் 100-வது நாளை நோக்கி….சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் மணி சார். நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் நீங்கள்தான்.அந்தப் புகைப்படத்தை 2005-ல் எடுத்திருந்தேன். அந்தப் புகைப்படத்தை நான் தொலைத்துவிட்டேன். உங்களுடன் இந்த இரண்டு புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியத்தை வரவழைக்க இரண்டு தசாப்தங்கள் & இரண்டு திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. உங்களின் திரைப்பட போஸ்டர்களை பார்த்து வியந்து நின்றவன் இன்று உங்கள் அருகில் நிற்கிறேன். அதுவும் பேச்சற்று நிற்கிறேன். அமரன் திரைப்படம் குறித்து பாராட்டியதற்கு நன்றி சார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் மணிரத்னம் தான் – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more