நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ.92 கோடி செலுத்தி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் உள்ளார்.
அவர் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். மூன்றாவது முதல் பத்தாவது இடம் வரை முறையே சல்மான் கான் (ரூ.75 கோடி), அமிதாப் பச்சன் (ரூ.71 கோடி), அஜய் தேவ்கன் (ரூ.42 கோடி), ஹிருத்திக் ரோஷன் (ரூ.42 கோடி), ரன்பீர் கபூர் (ரூ.36 கோடி), கபில் ஷர்மா (ரூ.26 கோடி), கரீனா கபூர் (ரூ.20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ.14 கோடி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.