Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு…கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் கார்த்தி நடித்துள்ளார்.2022-ம் ஆண்டில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் வெளியானது. இதில் அவர் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ தயாராகி வந்தது. 

இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.  இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News