Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

வாள் சண்டையால் எதிரிகளை கொய்து எறிந்த கார்த்தி…’சர்தார் 2′ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் ‘சர்தார்.’ இப்படம் வெளியான சமயத்தில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ‘சர்தார்’ திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்றது.

‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சர்தார் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது படத்திற்கான பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இன்று காலை வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News