Wednesday, November 13, 2024

திட்டமிட்டபடி வெளியாகிறது கங்குவா திரைப்படம்… பட ரிலீஸ்க்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா, திஷா படானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கங்குவா’ படம் நாளை (நவம்பர் 14) வெளியிடப்பட உள்ளது. ஆனால், இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் தேவையான பணம் செலுத்தப்பட்டு, அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில், இன்று நவம்பர் 13 மாலைக்குள் 20 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலைமையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், ‘கங்குவா’ வெளியீட்டிற்கு முன்பாக 1 கோடி ரூபாயை செலுத்தியதால், இப்படத்தை வெளியிட எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், டிசம்பர் 11ம் தேதிக்குள் 3 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, படம் வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடியே 35 லட்ச ரூபாயை டெபாசிட் செய்திருப்பதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல, பியூயல் டெக்னாலஜிஸ் தொடர்ந்த வழக்கில், அவர்கள் கேட்கப்பட்ட அசல் தொகையில் மீதமுள்ள 1 கோடியே 60 லட்ச ரூபாயை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதால், அந்த வழக்கிலும் ‘கங்குவா’ வெளியீட்டிற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்புகளின் மூலம் அனைத்து வழக்குகளின் சிக்கல்களிலிருந்து விடுபட்ட ‘கங்குவா’ படம், நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News