தென்னிந்திய சினிமாவில் தனது அறிமுகக் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். அவரது சினிமா வாழ்க்கை 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘கியூன் ஹோ கயா நா’ மூலம் தொடங்கியது. தமிழில் ‘பழனி’ மற்றும் ‘பொம்மலாட்டம்’ ஆகிய படங்கள் தமிழ் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
2020 ஆம் ஆண்டு கௌதம் கீட்சலு என்பவரை திருமணம் செய்த காஜலுக்கு, நீல் கீட்சலு என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகும், குழந்தை பிறந்த பிறகும், முன்னணி கதாநாயகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில், தனது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், புகைப்படங்களுக்கு அதிகமாக லைக்குகளை வழங்கி வருகின்றனர். மேலும், கணவர் மற்றும் குழந்தையுடன் காஜல் செம சந்தோஷமாக இருப்பதை கண்டு, ரசிகர்கள் கருத்துகள் பதிவு செய்து வருகிறார்கள்.