சிறுத்தை சிவா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர். தற்போது அவர் பிரம்மாண்டமான செலவில் இயக்கியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. இப்படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ல் மாலை நடைபெற உள்ளது. படம் அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குனர் சிவா பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவது குறித்து கேள்வி எழுப்பியபோது, இயக்குனர் சிவா, “நான் விஜய்யை பலமுறை சந்தித்துள்ளேன். கதையைப் பகிர்ந்து பேசினேன். ஆனால் சரியான நேரம் அமையவில்லை. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன், என்று கூறினார்.