தமிழில் ‘மதராசபட்டினம்’, ‘கிரிடம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’, ‘தாண்டவம்’ ‘தேவி 2’, ‘தலைவி’, ‘மிஷன் சாப்டர் 1’ உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் ஏ.எல். விஜய்.தற்போது, அவர் இயக்கிய இரண்டு புதிய படங்கள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

அந்த இரண்டில் ஒன்றில், மாதவன் மற்றும் கங்கனா நடித்துள்ளனர். ஏற்கனவே ‘தலைவி’ படத்தில் கங்கனாவுடன் பணியாற்றிய விஜய், மீண்டும் அவருடன் இணைந்து இந்த புதிய படத்தை உருவாக்கியுள்ளார். அதேபோன்று, ஹிந்தியில் மாதவனுடன் இரண்டு படங்களில் நடித்த கங்கனா, மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், புதுமுகங்கள் நடித்த ஒரு புதிய படமும் விஜயின் இயக்கத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ஒருபின் ஒருபாக வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.இதையடுத்து, நடிகை அனுஷ்கா நடிக்கும் ஒரு படமும், வெப்சீரிஸ் உள்ளிட்ட பல புதிய திட்டங்களையும் தற்போது ஏ.எல். விஜய் கையில் வைத்துள்ளாராம்.