தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் திகழ்கிறார். 45 வயதை கடந்திருந்தும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், “பிரபாஸ் எப்போது திருமணம் செய்யப் போகிறார்? யாரை திருமணம் செய்யப் போகிறார்?” என்பது குறித்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிரபாஸின் திருமணத்தைச் சுற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் பரவி கொண்டே இருக்கின்றன. இதே நிலையில், பிரபாஸின் தந்தை வழி உறவினர் ஒருவரால் அளித்தபேட்டியில், சிவபெருமானின் ஆசியில் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார். நாங்கள் அனைவரும் அவரது திருமணத்திற்காக முயற்சி செய்து வருகிறோம்.
சிவபெருமானின் அருளால், பிரபாஸின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்று கூறினார்.