இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கிய “ஹிட் – 3” திரைப்படம் நேற்று (மே.1) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில், வன்முறைக் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஆனால், முதல் நாள் வசூலாக ரூ. 44 கோடி வரை வசூலித்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன் பின்பாக, இப்படத்தின் அடுத்த பாகத்தில் கார்த்தி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன், கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்த “சிறுத்தை”, “தீரன்” போன்ற படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளதால், “ஹிட் – 4” படமும் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.