Touring Talkies
100% Cinema

Saturday, September 20, 2025

Touring Talkies

அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா? மனம் திறந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் நடைபெற்ற ‘பல்டி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பங்கேற்றிருந்தார்.. அப்போது, “அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள், அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “அனிருத் ஏற்கனவே நிறைய சாதித்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. உங்களின் ஆசீர்வாதத்துடன் இன்னும் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் நிறைய சாதிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

மேலும் அவர், “இப்போது இருக்கும் இயக்குநர்கள் புதுமையை விரும்புகிறார்கள். நான் புதிதாக முயற்சி செய்தால் அதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள். ஆல்பத்தில் பணியாற்றுவதும், திரைப்பட இசையில் பணியாற்றுவதும் ஒரே மாதிரி அனுபவம்தான்” என்றார்.

அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும் இந்த ‘பல்டி’ படம் விளையாட்டு பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக நடிக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். எஸ்டிகே ஃபிரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவை அலெக்ஸ் ஜே. புலிக்கல் மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News